மது நதியில் மிதக்கும் தமிழன்

வாழ்க தமிழ் என்பான்
வளர்க தமிழன் என்பான்
வார்த்தை ஒலி
மறைவதற்குள்
வேரிலே ஆசிட்டை
அள்ளித் தெளிப்பான்...

தமிழனுக்கும்
அறிவு உண்டா!
தமிழனுக்கும்
ஆண்மை உண்டா!

உண்டென்று சொல்வார்கள்
ஒன்று கேட்பேன்
பதில் சொல்வீரா?
சுய அறிவு உள்ளவனாய்
தமிழன் ஏன் நடப்பதில்லை...
யார்வந்து எதுசொன்னபோதும்
அதை நடத்திக் காட்டும்
அடிமாடாய்
நடந்துகொள்ளும்
தமிழனென்ன அறிவுள்ளவனா?

கடவுளுக்கு
எழுபத்திரண்டு
கைகள் என்றாலும் நம்புகிறான்.
சாதி என்னும் சாக்கடைதான்
சிறந்தது என்றாலும் நம்புகிறான்.
உட்பூசலை எவன் வந்தாலும்
தீயைப்போல் மூட்டிவளர்த்து
தமிழை
நெருப்பெடுத்து சுடுகிறான்.

தமிழனுக்கு ஆண்மையுண்டா?
உண்டென்று சொல்வார்கள்
ஒன்றுகேட்பேன்
பதில் சொல்வீரோ!

கூலிப்படையும் தமிழன்தான்
சாதிப்படையும் தமிழன்தான்
அரசியல் பொறுக்கியும் தமிழன்தான்
திருடனும் தமிழன்தான்
கொலைகாரனும் தமிழன்தான்
கொல்லையடிப்பவனும் தமிழன்தான்
இதுவெல்லாம் என்ன
ஆண்மையுள்ளவனின் செயலா?

தமிழ்நாடெங்கும்
மது நதியில்
நீந்தும்
மானமுள்ளவனும்
வீரமுள்ளவனும்
தமிழன்தான்...
தமிழன்தான்...
இந்தத் தலைமுறையின்
தருதலைத்தமிழன்
மாறுவதெப்போ?

மாறாமல் போனால்
தமிழன் பினமாவான்
தமிழகம் சுடுகாடாகும்.

எழுதியவர் : விமல் (7-May-13, 6:16 pm)
சேர்த்தது : சுவிமல்ராஜ்
பார்வை : 90

மேலே