பூவா? பூந்தோட்டமா?
அதிர்ந்து கூட பேசாத
அழகிய பெண்ணென்று
அறிமுகப் படுத்தினர் உன்னை !
அவர்களுக்குத் தெரியுமா?
நீ!
உன் விழிப் பேச்சால்
உலக மகா வாயாடிகளையும்
தோற்கடிப்பவள் என்று.
நகைக்காதே நீ!
உன் வெள்ளிச் சிரிப்புக்கு
முன்னால்
மற்றவர்களின் புன்னகை கூட,
கூழாங்க்கற்க்களின் ஓசையாய்
எரிச்சலூட்டுகிறது என்னை.
அழகாக மண்வெட்டி,
அடுக்கடுக்காய் உரமிட்டு,
அளவுக்கதிகமாய் வியர்வைச் சிந்தி,
அழகிய பூஞ்செடிகளை நட்டு
பூத்துக் குலுங்கும்
பூந்தோட்டம் அமைத்தேன்.
பூத்துக் குலுங்கும் பூவே!
தப்பித் தவறிக் கூட
என் தோட்டத்திற்குள் வராதே
உன்னைக் கண்டால்
என் பூந்தோட்டமே வாடிவிடும்.