முடிவு!

முடிவு மனதுதான் தீர்மானிக்கிறது!
மனமே சரியில்லை என்றால்
முதலில் நாடுவது உன்னை மட்டுமே!

உன் வருகையின்போது
வளரும் பருவம் எனக்கு
உடனிருந்து உன் நடப்பையும் வளர்த்தாய்!

என் மகிழ்வின்போதும்!
என் மனவருத்தத்தின் போதும் !
உற்ற துணையாய் உடனிருந்து கரைந்தவன் நீ!

கண்களில் கண்ணீர் சிந்தும் நிமிடங்களில்
துடைக்கும் கைகளில் துணையாய் நீ!

அதிகாலையிலிருந்து
அன்று இரவு உறங்கும்வரை
இன்பத்திலும் துன்பத்திலும்
துணையாய் வந்து கரம்பற்றியவன் நீ!

இடை இடையே எவ்வளவோ
தீர்மானித்தும் தொடர்கிறது உனக்கும் எனக்குமான நட்பு!

இன்று ஒரு முடிவு
உன் நடப்பை உதறிவிட
முடிவு செய்கிறது மனம் !

உற்ற நேரங்களில் மட்டும் தொடரட்டும் உனக்கும் எனக்குமான நட்பு !
முடிவு மனது தான் தீர்மானிக்கிறது !

எழுதியவர் : குணசேகரன்.K (8-May-13, 12:20 am)
சேர்த்தது : Gunasekaran.K
பார்வை : 92

மேலே