பறக்கும் பட்டத்தின் பெருமை
வண்ண நிற பட்டமாய் இருப்பேன் உனக்கு...
வால் தான் அழகாய் இருக்கும் எனக்கு..!
குழந்தைகள் விரும்பும் பட்டமே நான்...
குஷியாக பறக்கும் பட்டமே நான்..!
உயரத்தில் பறந்தால் உலகமே எனக்கு கீழே...
உங்கள் பார்வை எல்லாம் என் மேலே..!
காசு கொடுத்து வாங்கிக்கோ என்னை...
கவலைகளை மறக்க வைப்பேன் உன்னை..!
காற்றடித்தால் பறப்பேன்...
கையில் நூல் இருந்தால் உயரத்தில் போவேன்..!