பாதையை அறிந்திடுங்கள்
வழி மீது விழி வைத்து
சுவர் மீது அமர்ந்திருக்கும்
வருங்கால தலைவர்களே
எதிர்கால விஞ்ஞானிகளே
பெற்றவரை நினையுங்கள்
மற்றவரையும் மதியுங்கள்
வளமான வாழ்வை பெற்றிட
சிந்தியுங்கள் செயல்படுங்கள்
வலிவும் பொலிவும் அடைந்திட
பாதை அறிந்து பயணியுங்கள் !
பழனி குமார்