உனக்குள் ஒருவன்
உனக்காக ஒருவன்
எபோதுமே
போராடிக் கொண்டிருக்கிறான்....
ஒருவேளை
அவனை நீ
கொல்லவும் நேரிடலாம்...
அல்லது
அவனால் நீ
கொல்லவும் படலாம்...
சற்று யோசித்தால்
அவனுக்காக நீ
போராடவும் செய்யலாம்.....
விதி என்று
நீ பூட்டிய
கதவு திறக்க,
ஒரு மந்திர சாவியை
அவன் தயாரிக்கும் முன்
உன் கதவுகள் திறக்க
நீயே வழி கண்டு பிடி.......
தயவு செய்து
உடைக்க முயற்சிக்காதே....
பூட்டுக்குள்
தன்னை பூட்டிக் கொண்டிருக்கலாம்,
உனக்காக போராடுபவன்....