கள்ளிப்பால்....

பாழடைந்த பள்ளிக்கூடத்தில் பலத்த ஓசை!!!
ஊர் கிழவிக்கோ 50 ரூபாய் ஆசை....
குழந்தை சட்டென்று அழ...
மருத்துவச்சி வந்து மெல்ல...
ஏதோ மூதாட்டியிடம் சொல்ல....
புண்முறுவலுடன் புரிந்து கொண்ட பாட்டி!!!
பயணித்தால் கள்ளிக்காடு நோக்கி.......
பல கொன்று பாராட்டுப்பெற்றவள் பாட்டி என்பதால்...
பதட்டம் இன்றி பக்குவமாய் பணியை முடித்து,
பரிசில் வென்று பரிசலில் பறந்து போனால்....
செய்திப்பரிமாற்றம் சேராமல் சேர்கிறது செல்லம்மாவை....
செய்தி கேட்ட செல்லம்மா!!!
மனத்தால் இன்று செத்துப்போனா...
பால் கொடுக்க வேண்டிய உதிரம் இன்று உதிர்ந்து போனது!!!
பார்ப்பவர்கள் நெஞ்சமது உறைந்து போனது!!!
கணவரிடம் கண்ணீருடன் காரணம் கேட்க...
கண நேரத்தில் அவனும் கட்டி அணைக்க...
பிறந்தது பெண் குழந்தை!!!
கொடுத்தது *கள்ளிப்பால்* என,
சுருக்கமாய் சூழ்நிலையை சொல்லி முடிக்க ...
மதிகெட்ட மனிதர்களிடம் வாழ....
மனமில்லாமல் மாய்ந்து போனால்,
வீர செல்லம்மாவை....
சேர்ந்துவிட்டால் பிள்ளையிடம்
செல்ல அம்மாவாய்....
கள்ளிப்பாலை ஒழிப்போம்!!!
பெண்பால் போற்றுவோம்!!!
கண்ணீருடன் !
ஜெகன்.G