அன்னைக்கும் புரியும்

அம்புலி மாமா கதை
சொன்னவளுக்கு திருமண கதைகள்
சொல்ல தெரியாதா ?

உனக்கு பொம்மை முதல்
புடவை வரை வாங்கியவளுக்கு
உன்கணவனை தெரியாதா ?

உனது ஒவ்வொரு வலியும்
கண்டவளுக்கு உனது காதல்
வலி புரியாதா ??

சொல்லி பார் உனது
அன்னைக்கும் புரியும் உனது
உண்மை காதல் ...

எழுதியவர் : வீரா ஓவியா (8-May-13, 3:36 pm)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 70

மேலே