உன் முன் தெய்வம்!

உதிரத்தை பாலாக்கி கொடுத்து
உறக்கத்தையும் தியாகம்போது
உனக்காகவே வாழ்ந்த
அந்த உன்னத உறவு
இன்று வீதியோரத்தில்
அநாதையாய்...!

விதம்விதமாய் ஆடை அணிவித்து
உன்னை நித்தமும் அழகு பார்த்த
அமுதக் கடலான அம்மா இன்று
கிழிந்த சேலையுடன்
வீதிவீதியாக அலைகின்றாள்
ஒருவேளை உணவுக்காக...!!

நீ மழலை மொழி பேசுகையில்
துள்ளிக்குதித்து மகிழ்ந்த
அந்த கருணைக் கடல் இன்று
மரணத்தின் முகவரியை
தேடி அலைகின்றது
கருவறை உறவு கைவிட்டதால்...!!!

கருவறையில் சுமக்கும்போதே
உன் வாழ்வை கனவுகண்ட
அந்த தெய்வம் இன்று
அநாதை இல்லம் என்ற
கல்லறைக்குள் நடைபிணமாக
வாழ்கிறது...!!!!

தவமிருக்கத் தேவையில்லை
இறைவனை காண்பதற்கு
அம்மா என நீ சொல்லு
அடுத்த நிமிடமே உன்
முன்நிற்கும் கடவுள்..!!!!!

இனியும் வேண்டாம் தாமதம்
மன்னிப்புக் கேட்டுவிடு தாயிடம்
இல்லையேல் மனித உருவில்
வாழும் மிருகம் நீதான்......!!!!!!

இரா. சனத்
கம்பளை

எழுதியவர் : இரா. சனத் கம்பளை (8-May-13, 10:35 pm)
சேர்த்தது : raasanath
பார்வை : 110

மேலே