காதால் அறியா உறவொன்று

காதால் அறியா
உறவொன்று
கல்லெறிந்து கூடு
கலைக்க
கவலையுடன் கண்ணீரும்
காலம் காலமாய்
ஓடிவிட ,,,,,,,
தேடியே திரிகிறேன்
தினம் தினம் உன்னை,,,,,,,,,,,,,

குணம் அறியா
உன் உறவுகள்
பணம் தேடி
பாதாளம் தள்ளி வைக்குது
என் காதலை ,,,,,,,,
காதல் என்ற போர்வைக்கு
தீமூட்டி வெகு நாளாய்
வேக வைக்குது
என் உள்ளமதை,,,,,,,,,,,
உணர்வாயா????

உறங்கினாலும்
உன்னை நினைத்து
உளறியே கொள்கிறேன்
உணர்வாயா?????நீ ,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (8-May-13, 11:16 pm)
பார்வை : 151

மேலே