தத்துவங்கள் :2

நச்சு பற்கொண்ட
நாகத்தோடும் நட்பு கொள்,
கொள்ளாதே
என்றென்றும் துரோகத்தோடு நட்பு!!!
****************************************************************************
கடவுள் உண்டென்பார்
பலர்,இல்லையென்பார்
சிலர்,இவர்களோடு
பழகி பகுத்துப்பிரித்து
அறிந்து கொள்!!!
ஆனால் நான்தான்
கடவுள் என்பவனை
விட்டு விலகியே நில்!!!
****************************************************************************
வெற்றிக்கு வேண்டியது,
சிந்திக்கும் உள்ளெழுச்சி
ஒரு சதவீதம்,
வேர்க்கும் உடல்
உழைப்போ தொன்னுத்தொன்பது சதவீதம்!!!
****************************************************************************
சிங்க பிடரியை
பற்றி,கர்ஜனை
முழக்கத்தோடு,நாற்கால்
பாய்ச்சலில் போர்க்களம்
புகும் மறத்தமிழர்கள்
ஓநாயின் ஊளை
சத்தத்திற்கு ஒரு
போதும் அச்சம் கொள்ளார்!!!
****************************************************************************
இலக்கை நோக்கி
பயணிப்பவன் தடையிடும்
கடினங்களை புன்னகித்தே
கடக்க கற்றவன்
முட்களை நீக்கி
சுளைகளை சுவைப்பது
போலவே வெற்றியை சுவைப்பான்!!!
****************************************************************************
அன்புடன் நவீன் மென்மையானவன்