வெளியைப்போன்ற வலி
வலிகளை வெறுமனே
வலியென சொல்லிவிடமுடியாது
வலிகளிலும் வகைகளிருக்கின்றன
நட்பால் உண்டான நட்புவலி
உறவால் உண்டான உறவுவலி
சக அலுவலரால் உண்டான சூழ்ச்சிவலிஎன
வலிகள்பல இருந்தாலும்
வெளியையும்விட பெரியது
பிரியமானவரின் நிராகரிப்பாலான
வலி.