தவம் செய்திடிலோ
உன் உண்மைக் காதலுக்கு உடையவளாகிவிட
நான் தவம் செய்திடிலோ
உடைபட்ட உன் இதயத்துக்கு நான் களிம்பானேன்
உன் இதயத்துக்கு உரியவளாகும் வரம் அது எனக்கு இல்லையடா!
உன் அன்பு அதைப் பெறும் பேறு பெற்றேன் !
உன் காதல் அதை நான் தவறவிட்டேன்!
உன் இதயத்தில் நான் உள்ளேன் என்று ஐயமில்லையடா
உன் இதயமாக நான் இல்லை என்ற வேதனை மட்டும்
உன் முதல் காதல் அது எனக்கில்லை
காதலின் இடம் அதும் எனக்கில்லை
அனைத்தும் நிறைந்தாள் நான் தலைக்கனம் கொண்டுவிடுவேன்
பிறர் என்னை தலைகனக்காரி என கூற கூடாதென
இவற்றை எனக்கு மறுக்களிதாயோ!