.............அல்லவே...........

உன்மேல் அக்கறைகொண்டோர்,
அநேகம்பேர் வந்துவிட்டதால்,
என் சிநேகம் கசக்கக்கூடும் உனக்கு !
இது ஏறிவந்த ஏணியை எட்டிஉதைக்கிற செயல் !
என்றாலும் ஏற்கத் தவறுவதில்லையே மனம் !
நீ சினம்கொண்டு தாக்கினாலும் !
பாசம் பச்சோந்தி கிடையாது !!
இஷ்டம் போனதும் இடம்தேடி இடைமாறி,
நிறம்மாறி நீங்கிப்போக.......................

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (11-May-13, 6:22 pm)
பார்வை : 81

மேலே