காவிரியில் கரைந்த மனம்

ஆற்று மணலில் கால் புதைய
அண்டி வரும் நீர் தழுவ
அந்த சிறு ,அடி பாத
மண்ணரிப்பில்
கண்ட இன்பம்
கானலாகுதே!

கரை உடைய புரண்ட வெள்ளம்
கழனி வந்துச் சேர
இடையிடையே மறித்த வாய்க்கால்
மடை திறக்க-இலகுவாய்
கடை நிலந் தேடி- நீர் புகுந்த
காலம் -இன்று
காலமானதே!

சேற்றாடை நான் உடுத்தி
செந்நாத்து தூர விளம்ப
நாத்து முடி கையிலேந்தி
நட்டு வரும் பெண்களின்
பாட்டு ஒலிக் கேட்டு-வயல்க்காட்டு
வலி மறந்துப் போனோம் -இன்று அவை
வீட்டு மனையாக மாறி
மோட்ட பிளக்க பாட்டு ஒலிக்க
மன வலியாகிறோம் .....

காவிரியில் கரைப் புரள
கழனி எங்கும் நீர் நிறைய
முப்போகம் கண்ட நிலம்
முடமாகி போனதே
முப்பாட்டன் கொடுத்த செல்வம்
முலமாகி போகவே -இந்தியம்
எமனாக வந்ததே!

எழுதியவர் : தமிழ்முகிலன் (11-May-13, 7:33 pm)
பார்வை : 125

மேலே