வழித்துணை....!
ஒரு மாலைப் பொழுதில் தூங்கச்செல்லும் ஆதவனை மடியேந்தி தாலாட்டும் குளிர்காற்றுக்கு நடுவில் புகைமூட்ட புதையலுக்குள் இருந்து விரைந்துவந்தது அந்த விரைவு இரயில்.
முன்பதிவு செய்யவில்லை ஏனோ அன்று மூச்சடைக்கும் கூட்டமில்லை,
முதியவர்கள் பேச்சுக்கு இடையே குழந்தையின் "வீ...வீ..."அழுகுரலுக்கிடையில் குளிர்காற்றை முகத்தில்
ஏந்தி கொண்டிருந்தது ஒரு
ரோஜாப் பூ,
அட ! நம்ம காதாநாயகி ப்ரியா தாங்க!அந்த பெட்டியில் எல்லோருக்கும் இடமிருக்கையில்
நம்ம காதாநாயகன் சிவாவுக்கும் இடமிருந்தது
அம்மாவின் தாலாட்டு,அப்பாவின் திட்டு,திட்டினாலும் சிவாவுக்கென அவன் அப்பா விட்ட கண்ணீர் சொட்டு,
தம்பி-தங்கையின் சிறு சண்டை,
குறும்பு விளையாட்டு ,
சொந்த பந்தங்களின் பங்களிப்பு,
நட்பு வட்டங்களின் அரவணைப்பு இவை அனைத்தும் சேர்ந்து மொத்தமாக உருப்பெற்றிருந்த ப்ரியா அருகில், அவன் கேட்கவில்லை பக்கத்தில் அவளாக உட்கார சொன்னாள்.மீண்டும் சொன்னாள் யாரும் இல்லை உட்காருங்கள்.சிவா தயக்கத்துடன் யாரும் இல்லை தானே கேட்டுவிட்டு செளகரியமாக உட்கார்ந்து கொண்டான்.ப்ரியா பேசத்துவங்கினாள், சிவாவும் தொடர்ந்தான்.சந்தித்த கொஞ்ச நேரத்தில்
ஐந்தாறு நூற்றாண்டு பழகியது போல் பேசத்தொடங்கியது
அவர்கள் ஆன்மா!
பிடித்தது என்ன?பிடிக்காதது என்ன?
நீண்டது இருவரின் உரையாடல்.
கவிதை பிடிக்குமென்றாள்,
சிவா கவிதை சொல்ல முற்பட்டான், உடனே ப்ரியா காதல் கவிதை பிடிக்கும் ஆனால் அதை தான் எல்லோரும் சொல்கிறார்களே நீ எனக்காக ஆசிரியர்கள் பற்றி ஒரு கவிதை சொல் என கேட்டாள் ப்ரியா.சற்றுமுன் உரையாடியதில் அவள் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவி என்று சொல்லியிருந்தாள்.
அவளுக்காக சிவா சொல்லத் தொடங்கினான்
" நாலு எழுத்து நான் படிக்க நாள் முழுவதும்
கால்கடுக்க கரும்பலகை அருகே நின்றாய்,கற்பித்தாய் கற்றுக்கொண்டேன் உலகம் யாதெனில்
அன்பின் உருவம்
நீ தான் என்று...."
சிவாவிடம் அவள் பெற்றுக்கொண்ட பரிசு அது.இரயில்பெட்டியே நிறைந்திருந்த பொழுதும் சிவாவுக்குத் தெரிந்தது ப்ரியா மட்டுமே!பேச்சுக்கு நடுவில் கேட்டுவிட்டான் நீ எதுவரை என்னுடன் பயணிப்பாய் என்று?அவள் சொன்னாள் இந்த பயணம்
முற்றும் வரை.அதுவரை ஊர்ந்து கொண்டிருந்த இரயில் ப்ரியா அப்படி சொன்ன உடன் அணுக்கதிரைவிட வேகமாக பாயத்தொடங்கியது.பயணித்த தூரம் தெரியவில்லை அதுவரை அவன் கொண்டிருந்த சோகம் போன இடம் தெரியவில்லை.திடீர் என ஒரு இரயில் நிறுத்ததில் இரங்கப்போவதாய் சொன்னாள் ப்ரியா ."அடுத்த முறை உங்களை சந்திக்க நேர்ந்தால் உங்கள் மனைவியுடன் பார்க்க விரும்புகிறேன்" என சொல்லிவிட்டு தன் அன்புக்குரியவனுடன் அந்த இரயில் பெட்டியிலிருந்து இறங்கிச் சென்றாள் .மறுகணம் மரணத்தைத் தொட்டுவிட்டு திரும்பிவந்தது சிவாவின் மனம்.ப்ரியாவிற்கு கையசைத்துவிட்டு மனதுக்குள் சொல்லிக்கொண்டான்
"பாவி" யாருமில்லை,உன்னுடன் இறுதிவரை வருவேன் என்று ஏன் பொய் சொன்னாளோ!
அதுவரை அவர்கள் உரையாடலை கேட்டவர்கள்,
இயற்கை உபாதைகளுக்காக அந்த இருவரை கடந்து சென்றவர்கள்,புளுக்கம் என சொல்லி புகைபிடிக்கச் சென்றவர்களும் சிவாவிடம் மன்னித்துவிடுமாறு கேட்டார்கள்"அந்த பெண் சிவாவின் மனைவி என்று நினைத்துவிட்டதாய்".அவர்களை மன்னிக்கவில்லை மாறாக கடவுளுக்கு நன்றி சொன்னான் சிவா,
உடன் உட்கார இடம் தந்து அவன்
சுக-துக்கங்களை பகிர்ந்துகொள்ள இந்த பயணத்தில் ப்ரியாவை அனுப்பியதற்காக,அவளுக்கு கிடைக்கப் போகும் நல்வாழ்விற்காக. அவளுடன் சிவாவின் உரையாடலைக் கேட்ட சிவா வயது மதிக்கத்தக்க ஒரு ஆடவர் வந்து கேட்டார் அவள் இறங்கிச் செல்வதைப் பார்த்து "என்ன பாஸ் வாழ்க்கைத் துணை இறங்கி போயிருச்சு"அந்த ஆடவருக்கு சிவாவின் பதில் "பாஸு உங்களைப் போல நானும் அவள் என் வாழ்க்கைத் துணையாக வருவாள் என்று தான் நினைத்தேன் அவளுக்கு என்னுடன் வழித்துணையாக வரத்தான் பிடிச்சிருக்கு போல"என்று சொல்லிவிட்டு மனசுக்குள்
சிரித்தான் சிவா.
இப்போது சிவாவின் பக்கத்தில் ஒரு இருக்கை காலியாக இருக்கிறது அடுத்த இரயில் நிலையத்தில் அவனுக்கான வாழ்க்கைத் துணைவி வந்து அமர்ந்துகொள்வாள் என்கின்ற எதிர்பார்ப்பில் சிவாவின் வாழ்க்கை இரயில் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.அடுத்த இரயில் நிலையத்தில் சிவாவுக்கா வாழ்க்கைத் துணை காத்திருப்பாளா?
வாங்க சிவாவுடன் நாமும் பயணிப்போம்...,
வழித்துணையாக...!