அன்னையர் தினம்! தாயார் - பெருநாள்
அன்னையர் தினம்!
--------------------------
தாயார் - பெருநாள்
பெற்றவள் நாளில்லை?
உதிரம் உருவாகி
கருவில் களைப்பாறி
மதுர மொழிப்பாலை
மடி முட்டி இளைப்பாறி
கண்ணயரும் தாலாட்டில்
காதும் செவி விழி மூடி
ஆடும் தொட்டில் ஊஞ்சலடி
அசையா அழகு அவள் உயிரே
அன்பில் வளர்ந்த உடல் பயிரே
சேய் நான் செய்த தவப்பயனே
தாய் என தேர்ந்த கருணை அம்மா!
நீ கொள்ளை இட்ட அன்பு
நான் கொள்ளி இடும் துரும்பு
நீளும் தீர்க்காத கடனே
நாளும் நான் வாழ எண்ணும்
உன் உள்ளம் அம்மா!