கணவன் - மனைவியின் கலந்துரையாடல்களும்; இனிய நேரங்களும்...

காலையில் விழிப்பேன் அவள்முகத்தில்
மனம் லயித்து சிரிப்பேன் தலையெழுத்தில்
மெல்லியகுரலி லழைப்பேன் அவள்பெயரெழுத்தில்
"உம்"மென்று அவள்இசைய,
ஒருமுத்தம் உதிர்ப்பேன் அவள்உதட்டில்!

நான் முத்தம் கொடுக்க, நகைமுகம் எடுத்திடுவாள்
நாழிகையில், சத்தமின்றி சிரித்தே விழித்திடுவாள்
நித்தம் அவள்பெயர் உதிர்த்தே நான் நெருங்கிட,
எனை தள்ளிவிட்டு வெட்கம்மலர நகைத்திடுவாள்;

மேலும் நாழிகைநழுவ, உடனெழுந்து
வார்த்தைகள் உதிர்த்திடுவாள் இவ்வாறு,
" நீ விளையாட
நாம் விளையாட
இன்று உள்ளொருவன் விளையாடுறான்;
இனியும் விடியற்காலை விளையாடாது,
நாளைய சிறந்தபள்ளியில் அவன்விளையாட
விரைந தெழுந்து பணிக்கு செல்லுங்கள்"

நானும் நகைத்து பதிலாய்,

கட்டின மூன்றுமாதத்தில்,
தலைவனை பின்னுக்கும்
வரும் வாரிசை முன்னுக்கும்
வரிசைபடுத்தி பாடுபவளே,
இப்பெண்களே இப்படித் தானாடியென
விளையாட்டாய் வினவி,
காலை வணக்கம் இருமுறைகூறி எழுந்துக்கொண்டேன்;

ஒன்று என்மனைவிக்கும்,
மற்றொன்று - அவள் வயிற்றிலிருக்கும்
என் குழந்தைக்கும்!!!

- A. பிரேம் குமார் & சுமதி

எழுதியவர் : A. பிரேம் குமார் (12-May-13, 3:29 pm)
பார்வை : 181

மேலே