அழுத கண்ணீர் கடலோடு சேர்ந்ததோ ....?
அன்னையே அன்று
உன் மீது
இட்டுக்கட்டி வீண்பழி சுமத்தும் பொது
நீ அறிந்திருக்கவில்லை .
உன் கணவர் வெறுக்கும்போது
நீ அழுதது அவருக்காக ..
நீ உன் தாயிடமிருந்து
உண்மையை அறிந்ததன் பிறகு
நீ பட்ட துன்பமும் வேதனையும்
கண்ணீர் அருவியாகி
கடலில் சேர்ந்தன ..
அன்று உன் கண்ணீர்
கலந்ததாலோ என்னவோ ...
கடலில் தண்ணீர் உப்பாகின
உனது கண்ணீருக்கு
இறைவன் பதில்லளித்தான்
உனது பரிசுத்தத்தையும்
பதிபக்தியையும் ..
இறைவன் பரிசுத்தமாக்கினான் ..
அன்னையே உனக்கு தெரியுமா ?
அன்று உனக்கு இட்டுக்கட்டி
வீண்பழி சுமத்தின
மனிதர்களில் சிலர்
என் மீதும் இரக்கமின்றி
மனிதத்தன்மையே இல்லாத அளவுக்கு
இட்டுக்கட்டி வீண்பழி சுமத்தி
கலங்க படுத்தி
என் வாழகையையே
பரித்துக்கொண்டார்கள் ..
எனது துன்பம் வேதனை
கண்ணீர் அருவியானாலும்
என் கண்ணீரை கடல் ஏற்காமல்
தூக்கி எரிந்தது ஏனோ ?
அன்னையே உனது
பரிசுத்தத்தை இறைவன் வெளியாக்கினான்
எனது குற்றமற்ற நிலையையும்
பரிசுத்தத்தையும் வெளியாக்குவதர்க்கு
அன்னையே எனக்கு யாருமில்லையே ..
சொல் அன்னையே நீயாவது
என் இறைவன் மவ்னமானது ஏன் ?
எல்லா உண்மையும் தெரிந்ததாலா..?
இல்முன்னிஷா நிஷா