கனவு!

கனவு!

கனவு!
அது நினைவுகளின் ஏக்கம்!

கனவு!
அது உள் மனத்தூக்கம்!
நீ தூங்கும்போது அது விழிக்கும்!

கனவு!
அதை விழித்துக்கொணடே காணாதே!
அதனால் விடியலைத் தொலைக்காதே!
முட்டி மோதிக் கொள்ளாதே!

கனவு!
அது நினைவாகலாம்!
ஆனால் நினைவு கனவாகலாகாது!
நினைவுகள் செயலானால்
கனவுகள் தொடராது!

கனவு!
அது உன் மயக்கத்திலும்
உன்னை எழுப்பிக்கொண்டே இருக்கும்!
நினைந்தது முடிக்கப்படும்வரை
உனைத்தூண்டிக்கொண்டே இருக்கும்!
நினைத்ததை முடித்துவிடு!!

கனவு!
அது தொடரட்டும்!
அது உனது மறதிக்கு எச்சரிக்கை மணி!
நினைவுகள் இல்லாமல் கனவுகள் இல்லை!
கனவுகள் இல்லாமல் நினைவுகளும் இல்லை!!

கனவு!
அதுதான் அண்ணலைத்தூண்டியது!
விடுதலைக்கு வித்திட்டது!
அதுதான் பெரியாரை எழுப்பியது!
சமூக நீதி கிடைத்தது!
கலாமைத் தட்டியது!
கலந்துரைக்கச் செய்தது!

இலக்கியங்கள் இதிகாசங்கள் !
ஏற்றமிகு வளர்ச்சிகள் திட்டங்கள் !
எல்லாமே கனவுகளின் விளைவுகள் !

புதுப்புதுக் கண்டுபிடிப்புகள்!
புதுப்புது படைப்புகள்!
புதுப்புது மாற்றங்கள்!
உலக அறிமுகங்கள்!
உண்மை ஞானங்கள்!
அத்தனையும் கனவளித்த
ஆக்கமிகு கொடைகளே!

கனவு!
அதை கருத்தில் நிறுத்துங்கள்!
எதையுஞ் சாதிக்கலாம்!
ஆகாதது எதுவுமில்லை!
வேகாத கல்லுங்கூட
வெப்பங்கூட்டக் கரைந்திடும்!

உலகமே கனவுதான் !
உறங்கும்போதும் வளருது !
விழியாத தூக்கம் ஓன்று !
வேளை தேடி வரும் மட்டும்
விடாது கனவுகள் !
விளையட்டும் நன்மையே !

வாழ்க கனவு! வளர்க கனவு! நன்றி!


கவிஞர்.கொ.பெ.பிச்சையா

எழுதியவர் : சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா. (14-May-13, 8:24 am)
பார்வை : 157

மேலே