பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

உறவுகளே! உலகெங்கும் தமிழ் பரப்பிப் பேணும் நோக்கில் கிடைக்க முடியாத தமிழ் நூல்களைத் திரட்டி மின்நூல் களஞ்சியம் ஆக்கியுள்ளேன். இங்கு அறுபதிற்கு மேற்பட்ட தலைப்புகளின் கீழ் ஐந்நூறிற்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன.

ஆங்கில வழியில் தமிழ் கற்றல் (தமிழை மறந்த நம்மாளுகளுக்கும் தமிழை விரும்பும் பிறமொழிக்காரர் கற்கவும்), தமிழிலக்ணம், தமிழிலக்கியம், இதழியல், படைப்பாளியாக (கவிஞராக, எழுத்தாளராக, ...) மருத்துவம், உளவியல், உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) எனப் பயன்தரும் பல நூல்கள் உள்ளன.

இவற்றையெல்லாம் நீங்கள் பதிவிறக்கிப் பயன்படுத்த yarlpavananடொட்tk தளத்தில் "தமிழ்மின்நூல்கள்" என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

உறவுகளே! தனிமரம் ஒரு போதும் தோப்பாவதில்லை. அதுபோல எனது தனித்த முயற்சியும் வெற்றியைத் தராது. எனவே, தங்கள் ஒத்துழைப்பு மிகவும் எனக்குத் தேவைப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள உங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் ஊடாக இச்செய்தியைத் தெரிவித்து எல்லோரும் பயன்படுத்த ஒத்துழைப்புத் தாருங்கள்.

எனது மின்நூல் களஞ்சியத்தில் இல்லாத பயன்தரும் தமிழ் மின்நூல்கள் தங்களிடம் இருப்பின், யார்ல்பவணன் ஆற் ஹோட்மாயில் டொட் com என்ற மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள். அவற்றை எல்லாம் எனது மின்நூல் களஞ்சியத்தில் இணைக்க முடியும். இவ்வுதவி உங்கள் ஒத்துழைப்புடன் இம்மின்நூல் களஞ்சியம் மேம்பட உதவும்.

எழுதியவர் : யாழ்பாவாணன் (14-May-13, 12:51 pm)
பார்வை : 293

சிறந்த கட்டுரைகள்

மேலே