நண்பர்களே..... நன்றி! நன்றி!! நன்றி!!! நன்றி!!!..............

நண்பர்களே..... நன்றி! நன்றி!! நன்றி!!! நன்றி!!!.............

நன்றி கூறச் சொற்களைத் தேடினேன்! தேடுகிறேன்!!-தேடிக் கொண்டே இருககிறேன்!!!................................

எனது வாழ்வில் விடிவெள்ளி முளைத்து
வசந்தம் வீசக் காரணம் நண்பர் குழாமே தங்களது கூட்டுப் பிரர்த்தனைகளும் என் நலனில் அக்கறைக் கொண்ட என் மகள் மற்றும் உயிர்த்தோழிகளின் ஊக்குவிப்புமே எனக் கூறிக்கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்.. இவ் வெற்றியே என் மனக்கண்களைத் திறந்து மனக்குதிரையைத் உசுப்பி ஓ டச் செய்த திறவுகோல்!

படைப்பாற்றலுக்கு ஊன்றுகோலாய் அமைந்த
தங்களது வாழ்த்துகளே!! மனக்குதிரையைத்தட்டி விட்டீர்கள்! அச்சிறுபொறி விரைவில் தீப் பிழம்பாய் கக்கும் எண்ணக்குவியல்களை!! இம்மாற்றத்திற்கு உதவிய முக்கிய கிரியாஊக்கி எனதருமை மகள்கள், திருமதி ரம்யா ராஜு
திருமதி.வித்யா . மற்றும் எனதருமைத் தோழிகள் திருமதி.சுகன்யா கிருஷ்ணன்,திருமதி.பத்மாவதி என்பதனைக் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன்!

என் மனக்குதிரயைத் தட்டி எழுப்பிய நல்ல உள்ள ங்களுக்கு நன்றி கூறச் சொற்களைத் தேடினேன்! தேடுகிறேன்!! தேடிக் கொண்டே இருககிறேன்!!!............................

எனதருமை மகள் ரம்யாவின் விருப்பமான

" அறுபதைத் தாண்டியும் அழகான வாழ்கை!
எழுபதைத் தாண்டியும் எழுதும் ஆசை!!
எண்பதைத் தாண்டியும் என். வாழ்வில் வசந்தம் . தொண்ணூறிலும் இல்லைi கண்ணீர்....."

என்பதனை அகத்தே இருத்தி நான் எனக்காக வாழப்போகும் இறைவன் கொடுக்கும் அன்பளிப்பு நாட்களில் முழு மூச்சுடன் வாழ்ந்து காட்டுவதேஅவளுக்கு நான் அளிக்கும் அன்பு முத்தங்கள்.அது மட்டும் அன்றி அஃது ஒன்றே எனது உயரிய குறிக்கோள் என அறுதி இட்டுக் கூறுவேன்.

இன்று கடந்த காலத்தை எண்ணுகையில் அன்று
வீசிய கற்கள் மலர்களாய் மாறி வருடுகின்றனவே!
சுட்டெறித்த சூறாவளி சொற்கள் தென்றலாய் மோதி திக்கு முக்காடச் செய்கின்றனவே!ஆத்திரத்தில் கக்கிய வசை மொழிகள் அன்பூற்றாகப் பெருக்கெடுத்து அரவணைக்கின்றதே!!!
இந்த மாற்றம் ஏன் எப்படி?எவ்வாறு?
இது மாயையா? நிலையானதா?

எது எவ்வாறாயினும் குதிரை ஓட்டத்தைத் தொடங்கிவிட்டது.இதனை நிறு த்தஎல்லாம் வல்ல இயற்கை அன்னையால் மட்டுமே இயலும் இயற்கை அன்று முதல் இன்றுவரை எனக்கு உறுதுணையாகவே உள்ளது.பரம்பொருள் என்னை அவனியில் படைத்ததன் நோக்கினைக் கண்டிப்பாக நிறைவேற்றிக் கொள்வான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!!

"என் கடன் பணி செய்து கிடப்பதே"
"எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம்
தருகின்றான்"

என்பதனை சிந்தையில் நிறுத்தி எண்ணக் குவியள்கை வடிக்கத்தொடங்கி வைத்த இறைவன் வடித்து விடுவான்.எல்லாம் அவன் செயல்! அவனன்றி ஓரணுவும் நகராது!!

வாழ்க தமிழ் ! வாழ்க பாரதம் !! வாழ்க வையகம் !!!

பி.கு.இது நண்பர்களுக்கு நான் எழுதும் மடல்.

எழுதியவர் : வெ.வசந்தா. (14-May-13, 11:18 am)
சேர்த்தது : vasantham52
பார்வை : 104

சிறந்த கட்டுரைகள்

மேலே