வாழ்வான வாழ்வு ...

நதிக்கரையின் நாணல் போல் நிமிராத நடையழகும்
பிறைநிலவின் ஆரம் போல் நெளிகின்ற இடையழகும்
பைந்தமிழ் சொல் உரைக்கும் முத்தான இதழழகும்
கயல் போன்ற கருவிழிகள் சிமிட்டுகின்ற இமையழகும்
வர்ணிக்க வார்த்தையில்லா உன் கூந்தல் பேரழகும்
தெவிட்டாமல் பருகுகின்றேன் ,உன்னால்
தினந்தோறும் உருகுகின்றேன் .....
உன் அடிகள் தொடர்கின்றேன் ,
என்றும் உனைக்காண விழைகின்றேன்
தெளிவான பதில் தந்து எனக்குள்ளே வந்து விடு
வாழ்வான வாழ்வெனெக்கு மறுக்காமல் தந்துவிடு;

எழுதியவர் : மாதவன்.இர (14-May-13, 1:06 pm)
சேர்த்தது : Madhavan2013
பார்வை : 138

மேலே