டூ பீஸ் உடையில் நகரில் ஓடி முதலில் வருபவருக்கு 30,000 யூரோ பரிசு...? எங்கே..?
சுவுட்சர்லாந்து நாட்டில் பாசெல் நகரில் உள்ள ஒரு துணிக்கடை தான் இவ்வாறு விளம்பரம் செய்துள்ளது. ஒரு புதிய ஜவுளிக்கடையை திறக்கிறார்கள் அதன் பொருட்டு முதல் நாளில் இவ்வாறு ஒரு போட்டியை அறிவித்துள்ளது அந்த ஜவுளிக்கடை.
அதாவது டூ பீஸ் உடையை போட்டுக் கொண்டு, அதாவது அணிந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகளில் ஓட வேண்டும்...யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு 30,000 யூரோ என்று நினைத்து விடாதீர்கள்...வெறும் 400 யூரோ பணத்திற்கான மதிப்பில் துணிகளை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம், அதற்கான பரிசுக் கூப்பன் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள் அந்த துணி வியாபராம் செய்யும் கடைக்காரர்.
ஏனென்றால் அங்கெல்லாம் யாருமே பணத்தை கையால்கூட தொட மாட்டார்களாம் அவ்வளவு நாகரிகம் தெரிந்தவர்களாம் அந்த சுவிஸ் நாட்டுக்காரர்கள்...அதனால் தான் டோக்கன் ...டோக்கன்..அதாவது கூப்பன்...!
இந்த அறிவிப்பை கேள்விப்பட்டவுடன் பிரா ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு சுமார் 375 பெண்கள் குவிந்து விட்டார்கள் அந்த கடையின் முன். ஓட்டப்பந்தைய போட்டியும் பெரும் வரவேற்ப்பை பெற்று அங்குள்ள மக்கள் கண்டு களித்துள்ளனர்..
இந்த விபரங்களை ரொம்ப லேட்டாக அறிந்து கொண்ட அந்த நகரின் மேயர், மற்றும் சேரா என்ற பெண் எம்.பி.யும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்..( எல்லாம் ஒரு எதிர்ப்பு அல்லது கலாச்சார அரசியல் தான்..)
ஐரோப்பியர்கள் அறிவாளிகள்...மிகவும் நாகரிகம் தெரிந்தவர்கள்..
அவர்களை மாதிரியெல்லாம் கலாச்சாரம் கொண்டவர்கள் வேறு எங்கும் இல்லை என்று சொல்லிக்கொண்டு திரியும் கூட்டத்தைக்கூட விட்டு விடுவோம்...!
அந்த அளவிற்கு பெண்களை போகப்பொருளாக மாற்றிவிட்டார்கள்...அதில் ஐரோப்பியா என்ன...அமேரிக்கா என்ன...இங்கிலாந்து என்ன...?
பெண்கள், பெண் என்று உச்சரிக்கும் பொழுது கூட ஒரு கிளுகிளுப்பு வரவேண்டும் என்ற முயற்சியில் வென்று விட்டார்கள் கார்ப்பரேட் கம்பனிக்காரர்கள் என்றால் யாராவது மறுக்க முடியுமா...?
சங்கிலிக்கருப்பு