அடடே...உண்மையெல்லாம் பேசுகிறார்கள் கார்ப்பரேட் அறிவாளிகள்...?!
உலகில் உள்ள சிறந்த அறிவாளிகள், பணக்காரர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலேயே மும்மரமாக ஈடுபட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க - இந்திய எரிசக்தி உச்சிமாநாட்டில் அவர் பேசியவை..,
பணக்காரர்களுக்கு மட்டுமே பயன் தரக்கூடிய ஒரு சமூகத்தை நாம் உலகம் முழுதும் கட்டமைத்துள்ளோம். உலகில் உள்ள சிறந்த அறிவாளிகள், பணக்காரர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலேயே மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக ஏழைகளின் பிரச்சனைகள் உரிய கவனம் பெறுவதில்லை. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மீது கவனம் செலுத்தப்படுவதில்லை.
இந்தியாவில் 40 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர். 30 கோடி பேர் கல்வியறிவு பெறாதவர்களாக உள்ளனர். அதேசமயத்தில் மென்மேலும் பணக்காரர்களாகி வருபவர்களை நாடு கொண்டாடி வருகிறது என்றார் சாம் பிட்ரோடா..
எனவே தான் தற்பொழுது இரண்டு சட்டங்களும் இரண்டு தண்டனைகளும் நடைமுறையில் உள்ளன..
கார்ப்பரேட் கம்பனிகளுக்கு ஒரு சட்டம்...சிறிய தண்டனை அல்லது மன்னிப்பு..
கார்ப்பரேட் கம்பனிகளில் வேலை பார்ப்பவர்கள் தவிர்த்து, அமைப்பு சார்ந்த,,,அமைப்பு சாரா ஏனைய ஏழை மக்களுக்கு கொடும் சட்டமும் கடும் தண்டனையும் சிறைவாசமும்...
இன்றைய உலகில் அதிகம் படித்த பிரதமர் என்றால் அது மன்மோகன் சிங் அவர்கள் தான். அவர் ஆட்சியில் தான் அணைத்து துறைகளிலும் மிகப்பெரும் ஊழல்கள்..
லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டார்கள்...
இனிமேல் யாராவது, படித்தவன் ஆட்சிக்கு வந்தால் நாடு விளங்கிடும் என்று சொல்லட்டும்....!
சங்கிலிக்கருப்பு