சாதி கலவரத்தில் ஈடுபடும் என் அன்பு தோழர்களே...!
சாதி கலவரத்தில் ஈடுபடும் என் அன்பு தோழர்களே (கலவரத்தில் ஈடுப்பட்டவர்களை மட்டும்)
உங்களை சில கேள்விகள் நான் கேட்கிறேன்
அதனை தவறாக நினைக்க வேண்டாம்....
1, நீங்கள் செய்வது எல்லாம் சரியா?
2, உங்கள் சாதித் தலைவர் அப்படி என்ன உங்களுக்கு நல்லது செய்துவிட்டார்?
3, ஏன் இவ்ளோ சாதி வெறி?
4, நீங்கள் சொல்லும் சாதி உங்களுக்கு என்ன தந்துவிட்டது?
5, நீங்கள் மட்டும் தான் மனித இனமா மற்றவர்கள் எல்லாம் யார்?
6, உங்களால் உயிரை விட்ட தோழர்கள் என்ன பாவம் செய்தார்கள்?
7, உங்களுக்கு சுய சிந்தனை என்பது இல்லையா?
8, இப்படி செய்தால் தான் நீங்கள் வீர மிக்க மக்களா?
9, பொது சொத்துகளை சேதப்படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
10, சாதி உங்களை வளர்த்ததா அல்லது உங்கள் சாதித் தலைவனை வளர்த்ததா?
நாம் அனைவரும் தமிழ் மக்கள் தான் தோழர்களே நமக்குள் சாதி என்பது இல்லை. தோழரே, இப்படி செய்வதினால் உங்களுக்கு என்ன பயன் சொல்லுங்கள் தோழரே.......
முடிந்தால் இதையாவது சுயமாய் சிந்தியுங்கள்...