வீடுகள் தோறும் விதவைகள்

வணங்குவதெல்லாம் புத்தனை!
நீ வதைத்த உயிர்கள் எத்தனை?
அழித்தே தீரும் உனை அவ்வினை!
நீ அரக்க குணம் கொண்ட அஃறிணை!

இந்திய அரசின் கதவுகள்
அதைத் தட்டி ஓய்ந்தன எம் உறவுகள்!
இந்திய ராணுவ உதவிகளால் - இன்று
எம் வீடுகள் தோறும் விதவைகள்!

சுதந்திரக் கனவுகள் சுமந்தோம்! - இறுதியில்
சுவாசிக்கும் உரிமையும் இழந்தோம்!
மகிழ்ச்சி என்பதையே மறந்தோம்! - பயத்தினில்
மணிக்கொரு முறை நாம் இறந்தோம்!

தமிழராய்ப் பிறந்தது தவறா?
எமை நசிப்பவருடன் நல்லுறவா?
பாழும் கிணற்றில் பழகிய எமக்கு
ஈழம் எதற்கென்ற திமிரா?

கிளர்ச்சி செய்த பெருங்கூட்டம்
இன்று கிடப்பது கல்லறைத் தோட்டம்!
துரோகிகளால் நாம் தோற்றோம்! - இருப்பினும்
மலரும் ஒருநாள் மாற்றம்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (16-May-13, 4:01 pm)
பார்வை : 80

மேலே