பேனா பேசியது....

திடீரென என் பேனா திக்கி தடுமாறி எழுதியது !!!

நான் திகைத்துப்போனேன் !!

பிறகு தான் தெரிந்தது பேனாவின் மாற்றம்....
அது ஒய்வு கேட்டு என்னிடம் தொடுக்கிறதொரு போராட்டம் ....

பயந்து கேட்டேன் காரணம் மெல்ல...
நயந்து பேனா என்னிடம் சொல்ல !!!

"இதோ அந்த அந்தரங்க வார்த்தைகள்....."

"இடை" மீது கை வைத்து இறுக்குகிறாய் என்னை ....

உதரல்களால் அவ்வப்போது உலுப்புகிறாய் என்னை ....

உன் யோசனைக்காய் கடிக்கிறாய் யோசிக்காமல் என்னை ....

கருத்தாய் எழுதென்று கதறடிக்கிறாய் என்னை ....

மயக்கத்தில் மை இட்டு அழகு பார்க்கிறாய் என்னை ....

மோசமாய் எழுதினால் மேசைமீது முட்டுகிறாய் என்னை ....

அதனால்தான்,,,
இந்த கலக்கம் என்று ....

நான் சொன்னேன்....

என்ன செய்வது பேனாவே ???

எழுத்தாளனுக்கு எழுது"GOAL" தானே ஏற்றம் தரும் என்று,....

பேனாவும் சிரித்துகொண்டே ....
மறுபடியும் சிந்தனைகளை சிதறடிக்கத்தொடங்கிவிட்டது.....

பேனாவிற்கு நன்றி ..
ஜெகன்.ஜீ

எழுதியவர் : ஜெகன் .ஜீ (16-May-13, 4:41 pm)
Tanglish : pena pesiyathu
பார்வை : 242

மேலே