இன அழிப்பிற்கு எதிராக பிரிட்டன் சீக்கியர்கள் அறைகூவல் ..? தமிழ் மக்கள் கலந்து கொள்ளவும் வேண்டுகோள்...!

வரும் மே - 18 மற்றும் ஜூன் 9 அன்று இன அழிப்பிற்கு எதிராக பேரணி நடத்துகிறது பிரிட்டன் சீக்கிய அமைப்பு...அண்டை நாடான இலங்கையில் நடைபெற்ற தமிழ் இன அழிப்பிற்கு எதிராகவும் 1984 - ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த படு கொலைகளுக்கும் எதிராகவும், இந்திய இலங்கை அரசை கண்டித்தும் சர்வதேச நீதி வேண்டியும், இனப்படுகொலை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று பிரிட்டன் சீக்கியர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது இன்று.

இலங்கையில் இனப்படுகொலையை சந்தித்துள்ள தமிழர்கள், சீக்கியர்கள், பலுசிஸ் மக்கள், தோரேக் மக்கள், திபெத்திய மக்கள், காஷ்மீர் மக்கள்,சிந்தி மக்கள், சிக்கிம் மக்கள், மேற்கு பாப்புவான் மக்கள், ஸ்பானிய பாஸ்க் மக்கள், கரென் மக்கள், குர்திஸ் மக்கள் மற்றும் உய்குர் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர் பிரித்தானிய சீக்கிய மக்கள் கூட்டமைப்பு...

பெரிய நாடுகளில் உள்ள சிறுபான்மையின இன மக்களை அடக்கி ஒடுக்குவதாலும் அவர்களின் உரிமையை, சுதந்திரத்தை முற்றிலும் ஒடுக்குவதாலும் அவர்களின் போராட்டங்களை முறியடித்து விட முடியாது...

இந்த சீக்கியர்களின் கூட்டமைப்பு இவ்வாறு கூறியுள்ளது...1984 - ஆம் ஆண்டு டில்லியில் மட்டும் சுமார் 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் ஆக மொத்தமாக சுமார் 11,000 அப்பாவி சீக்கிய மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறுகிறது, மேலும்,

காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்களை அழிப்பதற்கு என்று கூறி ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்று ராணுவத்தை பொற்கோவிலில் அனுப்பி, சீக்கியர்களின் புனித கோவிலை அவமதித்தது என்று சீக்கிய இன அழிப்பை செய்தது இந்திய ராணுவம்...

இந்திரா காந்தியின் படுகொலையை காரணம் காட்டி, காங்கிரஸ் கட்சியினர் கோரத் தாண்டவம் ஆடினார்கள் சீக்கிய மக்கள் மீது, அன்று படுகொலைகளை நிகழ்த்திய பலர் இன்று காங்கிரஸ் கட்சியில் மிகவும் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

வளர்ந்து வரும் ஜனநாயகம் சுதந்திரம், தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் இன்று உலகெங்கும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன...இனங்களின் பாதுகாப்பு, சுதந்திரம், அவர்களுக்கென்று ஒரு அரசு இவையே தற்போதைய தேவை...எனவே இன அழிப்புகளை சந்தித்த மக்கள் அனைவரும் லண்டனில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (16-May-13, 5:09 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 67

மேலே