முகநூல் சுதந்திரம் - இறுதி விசாரணை தீர்ப்பு வரும் வரை - 66 A க்குத் தடை...!

டெல்லி சட்டக் கல்லூரி மாணவி ' ஸ்ரேயா சிங்கால் ' ஒரு பொது நல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார் இந்த ' எழுத்துப் பூட்டு ' சட்டத்தை எதிர்த்து... தகவல் தொழில் நுட்ப சட்டம் பிரிவு 66 A அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனக்கூறியும் எனவே அந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த 66 A வழக்கை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இந்த சட்டம் தொடர்பாக மத்திய அரசிடமும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்திடமும், மகாராஷ்டிர மாநில அரசிடமும் விளக்கம் கேட்டுள்ளது...

முதலில் மும்பையில் இந்த சட்டம் இரு பெண்களுக்கு எதிராக பயன்படுத்தப் பட்டன...பிறகு புதுச்சேரியில்... நேற்று ஆந்திரப் பிரதேச அரசால் இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சிங்கால் அவர்கள் இந்த பொது நல வழக்கை தொடர்ந்துள்ளார்..இதற்கு மத்திய அரசு இவ்வாறு தங்களது மனுவில் கூறியுள்ளார்கள்..

தகவல் தொழில் நுட்ப சட்டம் 66 A பேச்சு சுதந்திரத்தை பாதிப்பதாக இல்லை. சில குறிப்பிட்ட அதிகாரிகளின் அராஜகப் போக்கால்...இந்த சட்டம் தவறானது என்று அர்த்தம் இல்லை என்று கூறியுள்ளது. ( யாருக்கும் புரியக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்...)

மராட்டிய அரசு கூறிய மனுவில், தானே போலீஸ் எடுத்த நடவடிக்கை விரும்பத்தகாதது என ஒப்புக்கொண்டதுடன், சம்மந்தப்பட்ட போலீஸ் சூப்பிரண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

இன்று தங்களது விசாரணையில் இவ்வாறு கூறியுள்ளார்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பேஸ் புக்கில் மோசமான கருத்திடுவோரை, மூத்த காவலர்களின் அனுமதியின்றி கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையின் இறுதி உத்தரவு வரும் வரை, தற்போதுள்ள ஐடி சட்டம் 66 A - ன் கீழ், எவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூறியுள்ளது.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (16-May-13, 3:32 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 104

மேலே