இன்று மாலை 4 மணிக்கு சரண் அடைகிறாரா நடிகர் சஞ்சய் தத் ..?!
ஊடகங்களில் இவ்வாறு கூறுகிறார்கள்...மும்பை குண்டு வெடிப்பில் கைது செய்யப்படுகிறார் சஞ்சய்தத் என்று..
மும்பையில் நடந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்திய துப்பாக்கிகளில்..? எங்கே துப்பாக்கியைப் பயன்படுத்தினார்கள் தீவிரவாதிகள்...? வெடிகுண்டு தானே வைத்தார்கள்...அந்த வெடிகுண்டை வைத்தவர்களிடம் ஏ.கே. 56 ஒன்றும், ஒரு 9 எம்.எம். துப்பாக்கியும் வாங்கியிருக்கிறார் என்று கோர்ட்டில் கூறியிருக்கிறார்கள்...உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் ஊடகங்களில் தொலைக்காட்சிகளில் மும்பை வெடிகுண்டு வழக்கில் கோலிவுட் நடிகர் சஞ்சய்தத் இன்று சரணடைகிறார் என்று கூறுகிறார்கள்...
நியாயமாகப் பார்த்தல் இப்படித்தானே கூறவேண்டும்..பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளால் கொண்டு வரப்பட்ட துப்பாக்கியை வாங்கினார் அதற்காகத் தான் இந்த தண்டனை என்றல்லவா கூறவேண்டும்...?
பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட துப்பாக்கியை மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது வாங்கினாரா...? அல்லது அதற்கு முன்பே வாங்கினாரா...? என்று விளக்கமாக சொல்ல வேண்டும் அல்லவா..?
ஆக, ஆயுதம் வைத்திருந்த காரணத்திற்காக கைது செய்யப்படுகிறார் என்று அல்லவா கூற வேண்டும்...ஊடகங்கள்...? மும்பை வெடிகுண்டு கலவரத்தில் நேரடியாக தொடர்புடையவர் என்ற பொருளில் கூறுகிறார்கள் தொலைகாட்சி க்ரூப்கள்.. இதைதான் சொல்வது ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை தங்களது வணிக நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தி வருகிறார்கள் என்று. இது ஊடக நெறிமுறைக்கு எதிரானது என்று கொள்ளலாமா...?
மேலும் ஒன்றரை ஆண்டு ஜெயில் வாசம் முடிந்து ஜாமீனில் வெளிவந்த சஞ்சய்தத் எஞ்சியுள்ள மூன்றரை ஆண்டு தண்டனையை ஜெயிலில் கழிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
இதற்கிடையே முஸ்லிமாக இருந்த சஞ்சய் தத், பெரிய குங்குமத்தை நெத்தியில் பூசி, இந்துக் கோயிலுக்கு எல்லாம் போய் சாமி கும்பிட்டு சிவசேனா கட்சியினரை, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களை ஏமாற்றி விடலாம் என்று கருதி சினிமா மாதிரியே வேஷம் கட்டியிருந்தார்...எனபது வேறு விஷயம்...!
ஆனால், இன்று இதே சங் பரிவார் கூட்டங்கள் சஞ்சய் தத் வீட்டின் முன்னே குவிந்து தங்களது எதிர்ப்புகளை காட்டி வருகிறார்கள்...அதாவது சஞ்சய் தத் அவர்களுக்கு இந்த தண்டனை போதாது என்று.
பாலிவுட் காரர்கள் அனைவரும் சஞ்சய்தத் மீது பரிவு காட்ட வேண்டும்...
விடுதலை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்...!
சங்கிலிக்கருப்பு