பேருந்து பயணம்!

என்னைப் பார்த்து மறையும் நீ!
உன்னை அழகாய் காட்டும் எதிர் பிம்ப கண்ணாடிகள்!
ஒன்றும் அரியாதவளாய் தோழி காதில் கிசுக் கிசுக்கும் நீ!
ஏதோ அனைத்தும் அறிந்தவனாய் தலை அசைக்கும் நான்!
ஒவ்வொரு நிறுத்தத்திலும் சற்று நின்றே துடிக்கறது என் இதயம்!
நீ சிரித்தால் சிரிக்கும் உன் வீட்டுக் கண்ணாடி ஆனேன் நான்!
புத்தகத்தை புரடி என்னை ரசித்தபடி நீ!
உன்னைப் பார்த்து படித்துக் கொண்டிருக்கும் நான்!
பேருந்து சத்தத்திலும் என்னைப் பார் என்று நீ சொல்வதை தெளிவாய் கேட்கும் என் செவிகள்!
உன் ஆடையை சரியும் பொழுது தான் உனர்ந்தேன்!
மடிப்பு கலைந்த என் இதயத்தை!
இறங்கும் முன் பார்த்து விட்டுச் சென்றுவிட்டாள்!
இப்படியே நாட்களும் கடந்தது!
என் பேருந்துப் பயணமும் முடிந்தது என் காதலை சொல்லாமல்!

எழுதியவர் : கார்த்திக் (17-May-13, 10:46 am)
சேர்த்தது : pgrkavithai
பார்வை : 50

மேலே