சகஸ்வர லிங்கம்

தள்ளுவண்டியில்
பழக் கடைக்காரன்

அடுக்கி வைத்திருந்தான்
அழகிய நாவல் பழங்கள்...

அதனை உற்றுநோக்கியபோது
அகம் உள்ளே ஒரு அற்புத உணர்வு

ஆயிரம் லிங்கங்கள் சேர்ந்த
சகஸ்வர லிங்கத் தோற்றம்......!

தெய்வம் தள்ளு வண்டியிலும் - இருந்தது.....!
உழைப்பவனுக்காக மட்டும்........!

எழுதியவர் : HARI HARA NARAYANAN (17-May-13, 10:55 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 68

மேலே