அப்பாவுக்காக. 17
அப்பாவுக்காக
.
வறுத்து எடுக்கும்
அசுரப்பணி.
வந்தேன் வீட்டுக்கு
சீக்கிரமாய். பள்ளி
விடுமுறையில் வீட்டிலிருந்த மகள்
விளையாட அழைத்தாள்.
.
எரிச்சல் ஆனேன்.எனக்கு
எழுத்துவேலையும்,
கணக்கு வேலையும்
குவிஞ்சு கிடக்கு.
.
விளையாட்டு. வெட்டி
வேலை. வேறு வேலை
இருந்தால் பார். எனக்
கூறினேன் கடுப்புடன்.
.
மகள் வற்ப்புறுத்தவே
மனம் இல்லாமலே
ஆடத்துவங்கினேன்.சதுர
அங்க ஆட்டம்.
.
மனம் கணக்கு வேலையில்
மனக்கணக்கு தவற
தற்காப்பு ஆட்டமே
தப்பாட்டம் ஆனது.
.
கருப்பு சிப்பாயை
கருப்பு யானைமிதித்தது.
கருத்து தெளிவில்லை
குழப்பம் குறைவில்லை
கைகளின் போக்கும்,காய்களின்
போக்கும் சேரவில்லை.
திகைத்து போனேன்.
திணறினேன்
சிறப்பாக விளையாட
சிறுவனைப்போலானேன்.
.
ஒன்னரைமணிநேரம்
ஓடியதே தெரியவில்லை
ஆடிமுடித்தபின்
ஆத்துக்காரி கேட்டாள்.
.
ஏம்மா அப்பாவை
தொல்லை பன்ற?
இயல்பாக மகள் சொன்னாள்
பதட்டம்குறையும். மன
பாரம் குறையும்.
.
படிக்கிற பிள்ளை.என்ன
பாரம்? என்னபதட்டம்?
வினவிய மனைவிக்கு
விளக்கினாள் மகள்.
.
பாசத்தாயே!மனபாரம்
பதட்டம் எனக்கில்லை.
அப்பாவின் மன
அழுத்தம் போக்கவே
ஆட அழைத்தேன்.
.
மகள் தாயானாள்.
நான் குழந்தையானேன்.
.
யோகராணி. ரூ
பி.எஸ்சி
முதலாமாண்டு.