சோகங்களின் பதாகைகள்...

வளர்கின்றபோது
வளர்ந்து கொண்டே போகிறது
கனவுகளும் அதன்
எதிர்திசையில் கவலைகளும்....

வயது கூட கூட
குறைந்து கொண்டே போகிறது
சந்திப்புகளும் அதன் பயனாக வரும்
சந்தோசங்களும்...

பயணங்களின் திசையை மாற்றிவிடுகின்றன
பாதங்களும் பாதைகளும் அல்ல
பணமும்-பாசமும்....

சோகங்களின் பதாகைகளை
சுமந்து நிற்கும்
சோலைகாட்டு பொம்மைகள் போலே
மாறிவிட்டது மண்ணுலக
மானிட வாழ்க்கை...

எழுதியவர் : மீனாட்சி.பாபு (18-May-13, 7:08 pm)
சேர்த்தது : மீனாட்சி.பாபு
பார்வை : 107

மேலே