விடியல்

ஒவ்வொரு நாளும்
நாம் கண்விழிப்பதால்தான் விடிகிறது
கண்மூடியே இருந்தால்
விடியல் என்பதும் இல்லை
வெளிச்சம் என்பதும் இல்லை
கண் திறந்துபார்
உனக்காகவே இன்று விடிந்திருக்கிறது
ஒவ்வொரு நாளும்
எதாவது சாதிப்பதற்கு நினை
எப்போதோ சாதித்ததை நினைக்காதே
அது உனக்கு மகிழ்ச்சியைதரும்
ஆனால் வெற்றியை தராது
இன்று ஞாயிறு என்பதால்
விடுமுறை என்று ஒய்வு எடுக்காதே
உதிக்கின்ற சூரியனுக்கு ஏது விடுமுறை
வீசுகின்ற காற்றுக்கு விடுமுறை என்றால் உயினங்களின் நிலை என்னவாகும்
இப்போது புரியும் என்று நினைக்கிறேன்
நீயும் காற்றை சுவாசித்துதானே வாழ்கிறாய்.
விடிந்த இந்தநாள் வெளிச்சத்திற்காக மட்டுமில்லாமல் உன் இலட்சத்தியத்தின் தேடலுக்கான மற்றுமொரு வாய்ப்பு
என்றும் உழைப்பு உன் வசம்
இனி எப்போதும் வெற்றி உன் கைவசம்
இந்தநாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்

எழுதியவர் : அரவிந்த் (19-May-13, 6:20 am)
பார்வை : 149

மேலே