பதப்படுவோம்

பழுக்க காய்ச்சும் இரும்பு துண்டே
பக்குவமாய் வளைந்து உறுதிப்படும்
துன்பத்தில் உருகும் மனித மனம்
எதையும் தாங்கும் திடமாய் மாறும் .............

செதுக்கல் தாங்கும் மர துண்டே
அழகு பொங்கும் கலை நுட்பம்
மன செதுக்கல் தாங்கும் மனம் கூட
பக்குவம் பெற்று அமைதி பெரும் ............

உளி தாங்கும் கற்கள் தானே
கருணை காட்டும் கடவுளாய் மாறும்
வலி தாங்கும் இதயம் தானே
வாழ்வை உணர்ந்து வலு பெரும் ...........

மெல்ல உருகும் மெழுகு தானே
தியாக சுடரை ஒளிவிக்கும்
தியாகம் கொண்ட மனிதன் தானே
உலகம் போற்றும் நிலைக்கு போவான் .............

வளைந்து போகும் நாணல் புல்லே
ஆற்று நீரிடம் வெற்றி பெரும்
விட்டுகொடுத்து வாழும் மனமே
வெற்றிய எளிதில் கையால் தொடும் .............

விளக்கு ஏற்றும் தீபம் தானே
வீடு எரிக்கவும் பயன்படும்
நல்லதை செய்து நல் விளக்கேற்றி
இருட்டை போக்கும் முயற்சியை தேடு ........

ஆழ போகும் மனிதன் தானே
முத்து எடுத்து மேலே வருவான்
ஆழ புரிந்து வாழ்வை உணர்ந்து
அரிவாள் நீயும் சாதித்து காட்டு............

புயலாய் மாறி துன்பம் வேண்டாம்
தென்றலாய் மாறி இன்பம் சேறு
எங்கும் பரந்த இந்த பூமியில்
பூ வனங்களை எங்கும் வளர்த்திடு .............

முயற்ச்சி செய்தால் மலையும் கரையும்
உறுதி பூண்டு வாழ்வோம் நாம்
இரும்பு உள்ளத்தையும் கரைக்கும் வலிமை
நம்மிடம் உண்டு உணர்வோம் நாம் .........

பூத்து குலுங்கும் பூ போலே
பூத்து இருப்போம் மனத்தால் நாம்
வாசம் வீசி மனதை மயக்கும்
மந்திரம் கற்று வாழ்வோம் நாம் .................

எழுதியவர் : வினாயகமுருகன் (19-May-13, 10:36 am)
பார்வை : 90

மேலே