ஒ!!! தமிழா ?
![](https://eluthu.com/images/loading.gif)
தமிழ் எங்கள் உயீர்
தமிழ் எங்கள் உடல்
தமிழ் எங்கள் உறுப்பு
தமிழ் எங்கள் நரம்பு
தமிழ் எங்கள் எலும்பு
தமிழ் எங்கள் ரத்தம்
தமிழ் எங்கள் பித்தம்
தமிழ் எங்கள் கபம்
தமிழ் எங்கள் வாதம்
என்று என்று ....
தமிழ் மொழியை
சும்மா சும்மா வஞ்சனையாய்
கொஞ்சியது போதும்
தமிழா...
தமிழ் ...
தமிழன் வளர்ந்த அளவூக்கு
வளரவில்லை
காரணம்-- தமிழன்
அயல் மொழி படித்து
வளந்துவிட்டான்
தமிழ் மட்டும் மேல்நிலை பள்ளிகூடம் கூட
தாண்டாமல் தவிகிறது ...
நாளை அல்லது நாளை
நூறு கோடி ருபாய் சிலையாய் தமிழ் தாய்
உயர் பெறலாம்
ஆனால் --
தமிழன் தமிழ் மட்டும் படிக்க மாட்டான்
தமிழும் வளராது ...
தமிழ் இனம் இருந்ததாக
அடுத்த தமிழ் தலைமுறை புத்தகத்தில்
படித்து ரசிக்கும் ...
அதுவும் அயல் மொழியில் ...அதுசரி
என்ன செய்யலாம் ?