இனி -இவன் காதல்தொடர்கதை-(3)

இனி -இவனின் பள்ளிப்பருவம் சுவாரிசமானது ..
கிளுகிளுப்பானது காரணம் அவன் படித்தது ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கலவன் பாடசாலை ...

கலவன் பாடசாலையில் ஒவ்வொரு மாணவனும் கதாநாயகர்கள் ஒவ்வொரு மாணவியும் கதாநாயகிகள் இனி-இவன் அழகில் மன்மதனல்ல என்றாலும் அவனை சுற்றியும் பட்டாம் பூச்சிகள் பறக்காமலும் இல்லை ..நாள் தோறும் கண்ணாடிமுன் கனவு கண்ட காளையர்களில் இவனும் ஒருவன் .

இவனது பாடசாலைக்கு நாளை ஒரு புதுமுகம் ஒன்று வருகிறதையும் அது பெண் மாணவி இனி- இவன் நண்பர்கள் கூறினார்கள் ..

சொல்லவாவேண்டும் ..கதாநாயாகர்கள் மத்தியில் கடும் போட்டி யார் முதலில் அவளுடன் பேசுவது
யார் முதலில் பெயரை கேட்பது என்பது வழமையான போட்டி தான் ..யார் முதல் கதைக்கிறார்களோ ..அவர்களுக்கு வெற்றி ..மற்ற நண்பர்கள் பாடசாலை இடைவேளையில் ஏதேனும் சாப்பிட வாங்கி கொடுக்கணும்

இது வழமையான நிகழ்வுதான் ஆனால் இதுவரை இனி இவன் வென்றதில்லை காரணம் அவன் கூச்ச சுபாவம் உள்ளவன்

மறுநாள் வழமைபோல் பாடசாலை ஆரம்பமாகியது ....!!!

இனி இவன் காதல் கதை தொடரும் ....

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (20-May-13, 8:40 pm)
பார்வை : 165

மேலே