தாத்தீ
எனக்கு ஒரு சுருட்டு புகைக்க வேண்டும் என்ற பேராவல் வந்ததை கேட்டால் சிரிப்பீர்கள்.
தாத்தீ க்கு இன்று முதலாமாண்டு நினைவு நாள். முழுஆண்டு லீவில் தான் தாத்தி இறந்து போனாள். அப்பா சித்தப்பா கல்யாணி அத்தை பிள்ளைகள் குட்டிகள் என்று ஒரு பெரிய கூட்டமெ வீட்டில் ஆஜர் . தாத்திக்கு பிடித்ததெல்லாம் படை த்திருந்தார்கள். ஒன்றே ஒன்றை தவிர ...
தாத்தி க்கு என்னை ரொம்ப இஷ்டம். என்பெயர் சண்முகம் எங்க தாத்தாவின் பெயராம் தாத்தி என்னை அய்யா என் ராஜான்னு தான் கூப்பிடும் என் நண்பர்கள் ஷான் என்றழைப்பது பிடிக்கும் தான். என்கூட கிராமம் பாக்க வந்த ரசூல் ஷானு என்னை கூப்பிட்டு தாத்தி இடம் வாங்கிக்கட்டி கொண்டது இன்று நினைத்தாலும் சிரிப்பு சிரிப்பா வரும். பெயரை சுருக்கி கூப்பிட்டல் ஆயுசு குறையும் என்று -- உத்தியாக நம்பினாள். கு, கீன்னு ஒரெழுத்தில் பேர் வைச்சுட்டு 100 வயசு வரை வாழ்பவர்களை தாத்தி தெரிந்திருக்க ஞாயமில்லை .அப்பாவை மனக்கவல பெருமாளை எங்கே ? என்று முழுசா கூப்புடும் அழகே அழகு.
எங்கள் குடும்பத்தில் நிறைய பெண்கள். எனக்கு ரெண்டு அக்கா ஒரு தங்கை சித்தப்பா வீட்டில் 3 பெண்கள் அத்தைக்கு மூனு பெண்ணும் பத்து வருஷம் கழிச்சு ஒரு பையனும் . ஒன்றாவது அத்தபோல அழகா வரக்கூடாதா? மாமா போலவே கலரும் விரிஞ்ச மூக்கும் மூத்தவ எனக்கு 4 வயசு கம்மி. தாத்தீ பெயரிட்டு விட்டு எனக்கு கட்டி வைக்கலாம் என்று அத்தையின் கணக்கு பலிக்கப்போவது இல்லை. தாத்தீக்கும் அதில் உடன்பாடு தானான்னு கேட்கனும்னு ஆசை. ஒருவேளை ஆமாடா ராசா நீதான் சித்ராவை கட்டிக்கணும் சத்தியம் பண்ணிக்கொடு என்று விட்டால் என்ற பயத்திலேயே கேட்க வில்லை
தாத்தியின் அடம் தான் நிறைய பெண் பிள்ளைகளுக்கு காரணம் என்று மாமா அடிக்கடி சொல்வதுண்டு. அந்த மாமனாரின் தங்கமான குணம் யாருக்கும் வரவில்லை என்பார். மாமா அப்படி சொல்வதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. தாத்தி ரொம்ப பிடிவாதம் பிடித்தவள் தாத்தா இறந்ததும் தன்னோடு வந்து விடும்படி பிள்ளைகள் கெஞ்சி கேட்டும் மசிய வில்லை. அவர் இருந்த வீட்டில் தான் தன உயிரும் போகணுமாம்.
தாத்தா இருந்த காலத்தில் அவரை படுத்தி எடுத்தி இருக்கிறார் தாத்தி எனத்தான் எல்லோரும் சொல்கிறார்கள். ஒற்றைக்கு ஒரு பொண்ணான தன்னை கட்டிட்டு சொத்தெல்லாம் பாத்துட்டு வீட்டோடையே மாபிள்ளையாக இருந்ததனால் தான் அப்படி படுத்தி நாளோ என்னவோ.
தாத்தா சும்மா தானிருப்பார் ராஜாங்கம் எல்லாம் தாத்தி தான் பத்து குட்டுவம் நெல்லவிச்சு குத்தி வித்து காசாக்குவாளாம். கொடுக்கல் வாங்கல் நல்லது கெட்டது எல்லாம் தாத்தி சொல்படி தானாம்.
தாத்தா அடிக்கடி சாப்பாட்டிற்கு யாரையாவது கூட்டிட்டு வந்து உட்காரும் வாரேன்னுட்டு போய் ரகசியமாய் பாட்டியிடம் கெஞ்சினால் தான் சோரு போடுவாளாம்
தாத்தா சுருட்டு புகைப்பார் ஆனால் மாட்டுத்தொழுவத்தில் தான். கிட்ட வந்தால் குமட்டுவதாக தாத்தி விரட்டுவாளாம். மாட்டு தொழுவத்தில் தேடி எடுத்து ஒரக்குண்டில் போட்டுவிடுவாளாம்.
மிகுந்த சாதுவான தாத்தா இந்த ஒரு காரியத்துக்கு மட்டும் ரொம்ப கோபபபடுவாராம். இதுக்காவே உன்னை விட்டுட்டு சீக்கிரம் போயிர போறேன்னு கண்ணீர் விட்டுருக்கிராராம்.
தாத்தா இறந்த பிறகு ஒருநாள் அவர் பால்ய நண்பர் தங்கப்பன் ஆசாரி சொல்லி தான் எனக்கு தெரியும் இந்த கதையெல்லாம். ஏன் இந்த தாத்தா இப்படி கோழையாய் இருந்திருக்கிரார்னு கேட்டேன் என் பெயருக்கே அவமானமாக இருக்கிறதே ...
நீ வேற உன் தாத்திட்ட திட்டு வாங்கறதை அவன் ரசிக்கல்லா செய்தான் என்று சொன்னது எனக்கு புரியவில்லை.
தாத்தியை அத்தனை கொடுமைக்கரியாய் என் மனம் ஒப்பவே இல்லை தாத்தா மேலுள்ள பாசத்தினால் தான் செய்திருப்பாள் என நம்பவே விரும்புகிறேன்
உமக்கு பொண்டாட்டி நானா சுருட்டான்னு சன்டை பிடிப்பாளாம் . ஒருநாள் சுருட்டு பத்தவச்ச தத்தா தூ தூன்னு துப்பிட்டு தூக்கி வீசினதும் உண்டாம் தாத்தி அதில் ஏதோ தேய்த்து தெரியாமல் வைத்து விட்டாளாம்.
இப்படி செய்திட்டியே சண்டாளி என்று வயித்தேரிந்து விட்ட தத்தா, சுருட்டை விட்டாராம் பின் சுருக்கவே இறந்து போனாராம்
எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கு தாத்தா இறந்த வீட்டில் " நான்லா கொன்னுட்டேன் ... என் ராசாவை நான்லா கொன்னுட்டேன்னு " தாத்தி நெஞ்சில் அறைந்து அழுதது.
தாத்தா இறந்ததும் தன்னோடு வந்து விடும்படி பிள்ளைகள் கெஞ்சி கேட்டும் மறுத்து விட்டாள் ... தாத்தி ஆளே மாறிவிட்டாள்
தினமும் ரெண்டு பேருக்காவது சாப்பாடு போட்டாள். கட்டு கட்டாய் சுருட்டு வாங்கி வச்சுட்டு ஒன்றன் பின் ஒன்றாக பொருத்தி வைத்து விட்டு தாத்தாவிடம் பேசுவது போலவே பேசிக்கொண்டிருந்துவிட்டு ஒரு வருஷம் கழித்து அதே நாளில் இறந்து போனாள் என் தாத்தி.
தாத்தா நினைவாக ஒரு சுருட்டு பற்ற வைக்க எனக்கு ஆசை வந்து விட்டது.
விரும்பிக்கேட்டால் சித்ராவை கல்யாணம் பண்ணிக்கொள்வது பற்றியும் ஆலோசிக்க இருக்கிறேன்.