எல்லாம் அழகுதான்

புற்கள்
அழகுதான்
பனித்துளிகளை
ஏந்தி கொண்டிருக்கும் போது !

பூக்கள்
அழகுதான்
வண்ணத்துப்பூச்சியை
ஏந்தி கொண்டிருக்கும் போது !

வானம்
அழகுதான்
பௌர்ணமி நிலவை
ஏந்தி கொண்டிருக்கும் போது !

தார்சாலை கூட
அழகுதான்
உன் நிழலை
ஏந்தி கொண்டிருக்கும் போது !!!

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (21-May-13, 11:35 am)
Tanglish : ellam alakuthan
பார்வை : 131

மேலே