அன்பே! என்னுள் நீ !!!
என்னுடன் நீ வாழவேண்டும்!
என் கருநிற நிழல்போன்றல்ல.
என் கண்ணின் பார்வைபோல்.
என் செவியின் திறன்போல்.
என் நாவின் சுவைபோல்.
என் உடலின் உணர்வுபோல்.
என் உயிரின் காதல்போல்.
என் இதயத்தின் துடிப்புபோல்.
என் கோபத்தின் மௌனம்போல்.
என் வெற்றியின் பணிவுபோல்.
என் தோல்வியின் பாடம்போல்.
என் சோகத்தின் அழுகைபோல்.
என் கனவின் நிஜம்போல்.
என் நிஜத்தின் ஆன்மாபோல்.
என்றும் நீ!!! எதிலும் நீ!!!
நான் பார்க்கும் இடங்களில் நீ.
நான் கேட்கும் மொழிகளில் நீ.
நான் சுவாசிக்கும் காற்றில் நீ.
நான் பருகும் ஊற்றில் நீ.
நீ நானாக, நான் நீயாக !
நாம் நாமாக !
வேண்டுமடா நீ எனக்கு!!!

