ஆப்பிள் பழம் கவலை படுகிறது
சிவப்பாக இருப்பேன்...
சிம்லாவிலிருந்து வருவேன்..!
சுவீட்டாக இருப்பேன்... உன் உடம்புக்கு
சுகாதாரமான பழமாக இருப்பேன்..!
வீட்டு விஷேசத்திற்கு வாங்குகிறாய்...
விலையில் உயர்ந்த பழமே நான் தான்..!
எப்போதும் பணக்காரர் வீட்டில் அதிகம் இருப்பேன்
மகிழ்ச்சி எனக்கு...
ஏழை வீட்டில் அதிகம் இருப்பதில்லை
கவலையாய் இருக்கு எனக்கு..!