நட்புக் குழு வாழ்க !

நட்பு குழு வாழ்க!

தேடிப் பறக்கும் பட்டாம் பூச்சிகளாய்
பாடி மகிழும் பறவைக் கூட்டங்களாய்
கூடிப் பழகும் குழந்தைச் செல்வங்களாய்
நாடியே வளர்வோம் நாளும் நட்புகளாய் !!

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்!
எவர்முகமுந்தேடி இன்னும் அறியோம்!
காற்றில் அலையும் வலைதள உலகம்!
கூட்டி அணைத்திடக் குடும்பம் ஆனோம்!

காணா முகங்கள் கண்டிட்ட உறவுகள்!
வாணாளெல்லாம் வளரும் வரவுகள்!
வீணாப்போமோ எனயெழு நினைவுகள்!
தோணாதொழிந்தால் தொடருமோ நட்புகள்!

குரவர்கள் நாமே தர்மங்கள் படைப்போம்!
மறவர்கள் நாமே மடமைகள் உடைப்போம்!
அறவர்கள் நாமே வன்மைகள் துடைப்போம்!
உறவுகள் நாமே ஊழினை அடைப்போம்!!

எவரிது செய்யினும் அவர்வாழ வேண்டும்!
சுவராய் அமைந்தார் ஓவியம் கண்டோம்!
அழியா ஓவியக் குழுவாம் நட்பும்
வழியாய் துணையாய் வாழ்ந்திட வாழ்வோம்!!


கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா. (23-May-13, 7:58 am)
பார்வை : 6081

மேலே