சில்லென ஒரு காதல் கவிதை ............

நான் கண்ட நான் கண்ட
என் காதல் தேவதையோ
நீதானே நீதானே என் வாழ்வின் வான்பிறையோ
கண்முன்னே கண்முன்னே காணும் அழகே
உன் உருவம் என் கண்ணை என்றுமே பிரியாதே

அழகுக்கு அர்த்தம் தேடி
உன்னில்தான் பொருளை கண்டேன்
உன் பாதம் தேடி வந்து காதல்
பிச்சை கேட்டேன்

உன் காதல் இல்லையென்றால்
உயிரோடு சவமாவேன்
உன் காதல் உண்டென்றால்
மனம் வீசும் மலராவேன்

ஒரு கவிதை சொல்லவா
உன் பெயரை சொல்லவா
ஒரு வார்த்தை சொன்னால்;
வாழும் என் உயிரல்லவா .................

எழுதியவர் : ருத்ரன் (23-May-13, 5:45 pm)
பார்வை : 139

மேலே