என் தேவதை அழகு

அவள் விழி பேசும் மொழி
மௌனகலை பிரம்மன் சிலை
நடந்து வரும் மேகம்
அவள் பாத கலை ........

அவள் கூந்தல் எல்லாமே
வீணை கம்பிகளாய்
காற்றில் ஆடுகையில்
இசைஅருவி கேட்கிறதே ....

மின்னல் கொடியிடையாள்
பனித்துளி குளிராய்
அவள் பார்வை சிறு துளி என்மேல்
விழுந்திட பிறக்குது கவிதுளி இங்கே .......

வளைந்திடும் நாணல்
அவள் வளைவில் காணும்
நெளினங்கள் யாவும்
நமக்குள் நாணம் தோன்றும்

காதல் ,காதல் வசப்பட
காரணம் தேவை இல்லை
அவள் அழகை பாடிட
ஒரு கவிஞன் பிறக்கவில்லை

இன்னும் தொடர்ந்து வர்ணிக்க
எனக்கு தகுதி இல்லை
என்னிடம் வார்த்தை இருக்க வில்லை
அதுவே ரசிகனாய் என் கவலை

எழுதியவர் : ருத்ரன் (23-May-13, 5:30 pm)
Tanglish : en thevathai alagu
பார்வை : 142

மேலே