காத்திருக்கிறேன் காதலுடன்...............
உன் விழி நீர் தரையை தொடுமுன்
என்கையால் தாங்கிடுவேனே
அதன் காரணம் நான் என்றால்
மறுப்பின்றி உயிர் விடுவேனே
மௌன தடைதான் காதலில்
வேகத்தடையாய் வாழ்வில்
உன் விழி மொழி புரியாத போதும்
நான் கவிஞன் என சொல்வதில் என்ன நியாயம்
மனதை சார்ந்தது காதல்
மறுப்பது என்பது மூடம்
நினைவுகளே காதல் கால்தடம்
நடக்கட்டும் எல்லாம் விதியிடம்
காத்திருக்கிறேன் காதலுடன்
த்தேடுக்குமா என்னை
விட்டு போகுமா நினைவை
சுமக்கிறேன் நானும் தாயாய் காதலை