கருமேனி ஒரு மொழியால் ................

கருவிழியால் காதல் சொல்ல
என் இருவிழி மயங்கி நின்றேன்
அவள் விழி மொழி வந்த பின்னே
என் தாய் மொழி மறந்து நின்றேன்

மௌனமொழி நான் கற்க
காதல் தவம் செய்து நின்றேன்
அழகு மயில் அவள் சொல்ல
கவிதை என்று ரசித்து வந்தேன்

அவள் கவிதை நானறிவேன்
அவள் அசைவும் கவிதையாகும்
ரசிக்கையில் நான் உணர்ந்தேன்
என்னை நான் தொலைத்து நின்றேன்

மீட்டு எடுக்க வருவாளோ
சம்மதம் தருவாளோ
விழி மொழி புரியாது போனால்
தவிக்கத்தான் விடுவாளோ

என் கருமேனி ஒரு மொழியால் ...............

எழுதியவர் : ருத்ரன் (23-May-13, 6:03 pm)
பார்வை : 106

மேலே