வேகம்

ஒரு ஜப்பானிய சுற்றுலாப் பயணி மிகவும் ஆர்வத்துடன் சிங்காரச் சென்னையில் வந்து இறங்கினார்.

சென்னை விமான நிலையத்தில் இறங்கி ஒரு ஆட்டோவில் ஏறி சென்னை நகரை சுற்றிப்பார்க்கத் தன்னைக் கொண்டு செல்லும்படி ஓட்டுனரிடம் கூறினார்.

அவனும் அவரை குலுக்கோ குலுக்கு என்று குலுக்கிய படி ஆட்டோவை ஓட்டினான். முதலில் ஒரு ஹொண்டா அவர்களை முந்திச் சென்றது oh Honda, made in Japan… going faster என்றார் அந்த ஜப்பானியர்.

சிறிது நேரம் கழித்து ஒரு யமாஹா அவர்களை முந்திச் சென்றது . oh Yamaha, made in Japan… going faster என்றார் அந்த ஜப்பானியர்.

சிறிது நேரம் கழித்து இன்னொரு டொயோட்டா அவர்களை முந்திச் சென்றது. oh Toyota, made in Japan… going faster என்றார் அந்த ஜப்பானியர்.

பயணம் முடிந்தது கட்டணம் எவ்வளவு என்றார் ஜப்பானியர். ஆட்டோ ஓட்டுனர் ஆயிரம் ரூபா என்றார். ஐயோ அத்தனை தொகையா என்றார் ஜப்பானியர்.

ஓட்டுனர் ஆட்டோ மீட்டரைக் காட்டி meter…….made in India…..going very very faster….என்றான்.

நன்றி -முகநூல்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (25-May-13, 6:14 pm)
பார்வை : 498

சிறந்த நகைச்சுவைகள்

மேலே