பெண்களை கண்ணென காப்போம்!!!

அன்புள்ளம் கொண்ட

தோழர்களுக்கும் தோழிகளுக்கும் என் இதயம் கனிந்த வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்
பெண்கள் பெரும்பாலும் ஹிம்சைக்கு உட்படுத்தப்படும் இடம் எது என்ற தேடலில் இக்கட்டுரையோடும் தங்களோடும் இணைந்து பயணிப்பதில் மிக்க மகிழ்வடைகிறேன்

காவல் நிலையம்,பேருந்து நிலையம்,இரயில் நிலையம்,மருத்துவமனை இன்னும் பல பொது இடங்களில்தான் பெண்கள் பெரும்பாலும் ஹிம்சிக்க படுகிறார்கள் என்னும் நம் எண்ணத்திற்கு மாறாக தான் பிறந்த வீட்டிலும்,
புகுந்த வீட்டிலும்தான் பெரும்பாலம் வஞ்சிக்க பட்டு கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை என்று தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது

உண்மையில் ஆண்களை விட எல்லாவிதத்திலும் பெண்கள் இயற்கையிலேயே மேலோங்கி இருப்பினும் சில பல பழமைவாதம்,வரதட்ச்சனை,
போன்ற காரணங்களால் பெண்கள் இன்றளவும் பற்பல இன்னல்களுக்கு ஆளாவது கொடுமையிலும் கொடுமை

பெற்றோர்களே தங்களுக்கு மகனும், மகளும் இருப்பின் தயவு செய்து இருவரையும் சரிசமமாக அன்பும், அந்தஸ்தும் பகிர்ந்து அளிக்க தவறாதிர்கள்

முக்கியமாக தங்கள் பெண்குழந்தைகளை தைரியமாய் வளர்க்க முயற்சி செய்யுங்கள் எக்காரணம் கொண்டும் உங்கள் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்யும் பட்ச்சத்தில் வரதட்ச்சனை கொடுக்கவே கொடுக்கதீர்கள்,
மாறாக தங்கள் சொத்தில் சரிசமமாய் பிரித்து எவ்வித பேதமும் இல்லாது ஆண்வாரிசுக்கு எவ்வளவு அளிப்பீர்களோ அதே போல் பெண்வாரிசுக்கும் உரிய நேரத்தில் தவறாது அளித்து விடுங்கள்

பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொழுது மிக மிக கவனமாய் தங்கள் பெண்ணுக்கு ஏற்றவராகவும் எவ்வித தீய பழக்கங்களும் இல்லாதவராகவும் இருக்கிறாரா என்பதையும் நன்கு ஆராய்ந்து பிறகு மணம் முடித்து வைக்கவும்,

இதையும் மீறி அவர்கள் வேதனைக்கு உட்படுத்தப்பட்டால் அனுசரித்து வாழ சொல்லாமல் ,உன் வீட்டிற்கு வந்துவிடு என பெற்ற மகளை மனப்பூர்வமாய் ஆதரியுங்கள் இப்படி நீங்கள் செய்யும் பட்ச்சத்தில் பெண் படுகொலை செய்யப்படுவதில் இருந்தும்,தற்கொலை எண்ணங்களில் இருந்தும் மீண்டு பற்பல சாதனைகளை புரியும் ஆற்றல் கொண்டவளாய் வாழ்வாள் என்பதில் எவ்வித சந்தேகங்களும் கொள்ளதீர்கள்

தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு மணம் செய்ய முடிவு செய்ய நினைக்கும் பொழுது பொன்னுக்கும் பொருளுக்கும் அவனை விற்று விடாமல் அவன் சுய மரியாதை காக்கும் விதத்தில் வரதட்ச்சனை வாங்காது மணம் செய்து வையுங்கள்

மனைவியிடம் அன்பாய் நடக்க தவறாது சொல்லி கொடுங்கள்,அவர்களுக்குள் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமாயின் நன்கு ஆராய்ந்து நடுநிலையாய் நடந்து கொள்ளுங்கள்

மகளுடனும்,மருமகளுடனும் மாமியாரை இல்லாது தோழியாய் நடந்து கொள்ளுங்கள் பெண்களுக்கு பல வேளைகளில் பெண்களே எதிரி என்ற நிலையை மாற்றி அமையுங்கள்

பெண் பிள்ளை,ஆண் பிள்ளை என்ற பேதத்தை முற்றிலுமாக தவிர்த்து பிள்ளைகள் என்ற கோணத்தில் பாருங்கள்

இன்று நீங்கள் ஆண்மகனை ஈன்று விட்டீர்கள் நாளை உங்கள் மகன் ஒரு பெண் பிள்ளையை ஈன்று எடுக்கவும் வாய்ப்பு உள்ளதை எப்போதும் மறவாதிருப்பீராக

ஆண் பெண் பிள்ளைகள் பிறப்பது ஆணின் விந்துவில் உள்ள விதைதான் தீர்மானிக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்,ஆகையால் பெண்களை எந்தவிதகுறைபாடுகளும் சொல்லும் முன் ஒன்றுக்கு கோடி முறை யோசியுங்கள் தோழர்களே


பல மருத்துவ மனைகளில் பெண் சிசுக்கொலை சர்வசாதரணமாக நிகழ்த்தப்பட்டு விடுகிறது இதற்க்கு மருத்துவர்களும் அக்குழந்தையின் தந்தையும்,தந்தை வழி உறவுகளும் துணை போகிறார்கள் என்பதை எண்ணி பார்க்கும் பொழுது மனம் வேதனையின் உச்சத்தை அடைகிறது
இவர்கள் சட்டத்தில் இருந்து எளிதாக தப்பி விடினும் இறைவனின் தண்டனைகளில் இருந்து ஒரு போதும் தப்ப இயலாது

ஒரு குடும்பத்திற்கு உழைப்பதில் ஆணை விட பெண் மும்மடங்கு அதிகமாக உழைக்கிறாள்,பின் துயில்கிறாள்,முன் எழுகிறாள்,கணவனுக்கு,
கணவனை பெற்றவர்கள்,உடன் பிறந்தவர்கள்,
பெற்ற பிள்ளைகள் என எல்லோர்க்கும் 24 மணிநேரமும் சேவை என்ற பெயரில் ஆண் வர்க்கம் செய்ய முடியா பற்பல உழைப்பை எடுக்கிறாள் அவர்களுக்கு உரிய அந்தஸ்த்தை தருவது ஒவ்வொரு ஆண்மகனின் இன்றி அமையா கடமையாகும்

எந்த ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் நண்பர்களாய் இருக்கிறார்களோ அவ்வீட்டில் மட்டுமே மகிழ்ச்சி நிலையாய் நீடித்து வாழ்ந்து கொண்டிருக்கும்

நாம் அனைவரும் தேவையில்லாத சந்தேகம், போதை, துரோகம்,இது போன்ற விஷயங்களை முற்றிலுமாய் தவிர்த்து made for each other என சொல்வதைப்போல் கணவனுக்காக மனைவியும்,
மனைவிக்காக கணவனும் வாழ்ந்து
வாழும் போதே சொர்க்கத்தை காண எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

பெண்களிடம் கைநீட்டும்
அந்நொடியில் ஆண்மகன்
என்ற அடையாளம்
மட்டுமின்றி மனிதன்
என்ற அந்தஸ்த்தையும்
ஒருசேர இழந்து போகிறாய்!!!

ஒரு முறை
நீ கற்பம்
தரித்து பிரசவிப்பதாய்
கற்பனை செய்துப்பார்
நீட்டிய கை
தானாய் கும்பிடும்!!!

பெண்களுக்கு எதிராய்
தீஞ்சொற்கள் பேசும்
முன்,உன்
நாக்கினிக்க குருதியை
பாலாக்கி மார்ரூட்டிய
தாய் அவளை
எண்ணிப்பார் உன்
நாக்கு உனையரியாது
பெண்களை போற்றி துதிபாடும்!!!

நீ பிறக்க
பெண் வேண்டும்
உன்னுடைய வாரிசை
சுமக்க பெண்
வேண்டும் ஆனால்
நீயோ நித்தம்
நித்தம் அவர்களுக்கு
கொடுமைகளும் வேதனைகளும்
தயங்காமல் தாராளமாய்
எந்நிலையிலும் அவர்களுக்கு
அளிப்பாய் என்பது,

நீ உண்ட
மீண்டும் உண்ணப்போகும்
அன்னத்தில் நீயே
மலம் கழிப்பதற்கு சமமாகும்!!!

பெண் சிசுக்கொலை
பெண் ஹிம்சை
இது போன்ற
கேவலங்களை செய்வதை
காட்டிலும் மறித்து
போவதே மேல்!!!


பெண்களை கண்ணென காப்போம்
பெண்களை போற்றி கொண்டாடுவோம்!!!

குறிப்பு:இக்கட்டுரை வரைய மூல காரணமாக இருந்த என் அன்பு அண்ணன் s .m ஆனந்த் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

அன்புடன் நவீன் மென்மையானவன்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (26-May-13, 12:48 am)
பார்வை : 1078

மேலே